Juli 17, 2024

நடிகை வனிதாவின் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி?

பிக்பாஸ் மூலம் மீண்டும் ரசிகர் பட்டாளத்தினை வென்ற நடிகை வனிதா கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினர். காரணம் பீட்டர் பால் தனது முன்னாள் மனைவி எலிசபெத்தை விவாகரத்து செய்யாமல் அவசர அவசரமாக வனிதாவை கிறிஸ்தவ முறைப்படி அவரது வீட்டில் வைத்து திருமணம் செய்தது தான்.

பின்பு தனது திருமணத்தினைக் குறித்து பேசிய பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கு சரமாரியாக பதிலடி கொடுத்த வனிதாவின் பிரச்சினை சமீபத்தில் சற்று ஓய்ந்து இருந்தது.

இந்நிலையில் பீட்டர் பாலுக்கு நேற்று இரவு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.