März 28, 2025

எஸ்.பி.பி. இன் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவமனை மாலை தகவல்.

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை MGM மருத்துவமனை மாலை 6 மணிக்கு வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவ மனை விளக்கம் அளித்துள்ளது.
இதேவேளை, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை மாலையில் சந்தித்து விட்டு திரும்பிய அவரது மகன் எஸ்.பி. பி. சரண், தனது தந்தை நினைவுடன் உள்ளதாகவும், தம்மை அடையாளம் கண்டு, சைகை மொழியில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்