Juli 17, 2024

தொண்டமாற்றில் விபத்து! குடும்பஸ்தர் பலி!

தொண்டமனாறைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உருத்திரன் திருவருட்செல்வன் (வயது -50) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்துக்குள்ளானார்.
விபத்தில்படுகாயமடைந்த அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது வழியில் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.