März 28, 2023

வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் நடந்து வரும் தொல்பொருள் விவகாரம் சார்ந்த வழக்குகளை கொழும்பிற்கு மாற்ற யோசனை!

வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் நடந்து வரும் தொல்பொருள் விவகாரம் சார்ந்த வழக்குகளை கொழும்பிற்கு மாற்ற யோசனை!

வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் நடந்து வரும் தொல்பொருள் விவகாரம் சார்ந்த வழக்குகளை கொழும்பிற்கு மாற்றும்படி, பௌத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிக்குகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி வாக்களித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், பௌத்த பிக்குகளிற்குமிடையிலான பௌத்த ஆலோசனைக்குழுவின் 4வது கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், தொல்பொருள் சட்டத்தை திருத்துவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்போதே, வடக்கு கிழக்கில் நடக்கும் தொல்பொருள் சார்ந்த வழக்குகளை கொழும்பிற்கு இடமாற்றம் செய்ய பிக்குகள் வலியுறுத்தினர்.

முறையான கவனிப்பில்லாமல் இந்த பகுதிகளில் தொல்லியல் சின்னங்கள் பாழடைந்து வருவதாகவும் பிக்குகள் முறையிட்டனர்.