September 11, 2024

மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ள சீனா

மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ள சீனா

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்களுக்கு சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கையில் உள்ள சீன தூதரகம் நேற்று டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளது.

99 ஆண்டு குத்தகைக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைக்க முன்னாள் அரசு எடுத்த முடிவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடும் விமர்சனங்களை எழுப்பினார்.

வார இறுதியில் மஹியங்கனையில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர், முன்னாள் அரசு இலங்கைக்குச் சொந்தமான சொத்துக்களை வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டினார்.

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது அப்போதைய சில அமைச்சர்களின் மௌனம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

“அவர்கள் அந்த நேரத்தில் ஒப்பந்தத்தை எதிர்த்திருக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள சீனத் தூதரகம்,

“இந்த துறைமுகம் 100 சதவீதம் இலங்கைக்கு சொந்தமானது. இலங்கையில் அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியெழுப்ப மற்றும் கூட்டாக இயக்க சீன நிறுவனங்களை அழைத்தன.

இந்த ஒப்பந்தம் 100 சதவீதம் இலங்கைக்கு சொந்தமானது. பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்கிறது என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.