März 28, 2023

தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி மோதல் !

தேர்தல் பிரச்சாரம் மோதல்களாக யாழில் பரிணமிக்க தொடங்கியுள்ளது.
சுவரொட்டி ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களே மோதலில் குதித்துள்ளனர்.

சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சிகளின் ஆதரவாளர்கள் நேற்று முன் தினம் நள்ளிரவு மோதிக் கொண்டதில், பெண் ஒருவர் உள் ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.
தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதிலேயே நேற்று முன் தினம் இரவு 11.30 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.