மருத்துவமனையில் தீ! 5 கொரோனா நோயாளிகள் உடல் கருகிப் பலி!

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா பங்களாதேஷ் நாட்டிலும் பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைகாக  தலைநகர் டாக்காவில்  குல்ஷான் சந்தை பகுதியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் உள்பட 5 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.