Mai 30, 2023

சமாதானத்தை மகிந்த கொண்டு வந்தார்: இரா.சம்பந்தன்?

இலங்கையில் நீதியினதும் சமத்துவத்துனதும் கௌரவத்தினதும் அடிப்படையிலான நேர்மையான நிரந்தர சமாதானத்தை கொண்டுவந்த ஒரு தலைவர் எனும் பெயரை வரலாற்றில் பதிந்து கொள்வார் மஹிந்த ராஜபக்ச என வாழ்த்தியுள்ளார் மகிந்த ராஜபக்ஸ.

மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாழ்வின் 50 வது ஆண்டு நிறைவை ஒட்டி பல தரப்புக்களும் தமது வாழ்த்தினை தெரிவித்துவருகின்றன.
இந்நிலையில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தியில் நேர்மையான நிரந்தர சமாதனத்தை கொண்டுவந்த ஒரு தலைவர் எனும் பெயரை வரலாற்றில் பதிந்து கொள்வார் மஹிந்த ராஜபக்ச என வாழ்த்தியுள்ளார்.
முன்னதாக தனக்கான எதிர்கட்சி தலைவர் பங்களாவை விட்டுகொடுத்தமை தொடர்பில் மகிந்தவுடன் தனது மகிழ்ச்சியை இரா.சம்பந்தன் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.