மட்டக்களப்பில் திடீர் லட்சாதிபதியான தமிழர்!

வாகரை பிரதேச செயலகத்தின் எல்லைக்கிராமங்களில் உள்ள காணிகளை மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் வேந்தன் உதவியுடன் பல கிராமங்களில் உள்ள காணிகளை சட்டத்திற்கு முரனான வகையில் சுபாஷ் விதானையார் விற்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.

குறித்த விதானையார் முன்னர் பணி செய்த மங்கேணிமத்தி – புணானைகிழக்கு – பணிச்சங்கேணி போது ஏழை மக்களின் காணியை இஸ்லாமிய மத சகோதரர்களுக்கு பல கோடி ரூபா பணங்களை வாங்கி பேமிட் கொடுத்து உறுதிகளை முடித்துக் கொடுத்தவர் இந்த சுபாஷ் விதானையார்.

இப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இஸ்லாமிய சகோதரர்களால் சட்டவிரோதமாக அடைக்கப்பட்ட காணியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவ்விடத்திற்கு விரைந்தது சட்டத்திற்கு முரனான வகையில் காணிகளை அடைத்த அனைவரும் அவ்விடத்தில் இருந்து அகற்றியதுடன் சம்பந்தப்பட்ட காணிகளை வழங்கியவர்கள் யார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் வினவிய போது சுபாஷ் விதானையார் மற்றும் உட்பட காணி ஆணையாளர் வேந்தன் ஆக்யோரது பெயரை சட்டத்திற்கு முரனான வகையில் காணி அடைத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இப்பகுதியில் வாழும் தமிழ் மக்களின் காணிகளுக்கு பல வருடங்களாக காணி அத்தாட்சிப் பத்திரங்களை மக்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார் சுபாஷ் விதானையார்.

ஓமடியாமடு, றிதிதென்ன,புணாணை,குகுகனேச புரம், ஆலங்குளம்,வாலமங்கேனி, சேனைவெட்டை இந்த கிராமங்கள் மற்றும் மாங்கேனி காயங்கேனி கிராமங்கள் 6 ஏக்கர் காணி இவரது சகோதரி பெயரில் குகனேசபுரத்தில் இருந்தது தற்போது முஸ்லிம் நபர்களுக்கு விற்கப்பட்டது..

ஆலங்குளத்தில் கொழும்பு பிரதான வீதியில் முஸ்லிம்களுக்கு தமிழர் காணியை ஒப்பத்தினை பெயர் மாற்றம் செய்து விற்றுள்ளார் இந்த விதானையார்.

ஆலங்குளம் கொழும்பு பிரதான வீதியில் வாகரை பிரதேச செயலகத்தில் பணி புரியும் முன்னாள் மற்றும் இந்நாள் அரச உத்தியோகத்தர்கள் பலருக்கு திருட்டுக் காணிகள் உள்ளதாக அங்குள்ள மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தற்போது வாழைச்சேனை பகுதியில் பணியாற்றும் விதானையார் சுபாஷ் அங்கிருந்து கொண்டு சம்பந்தப்பட்ட கிராமத்திற்குரிய காணிகளை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு பணியினை மேற்கொண்டு வருகிறார் காணி ஆணையாளர் வேந்தன் உதவியுடன் என அப்பகுதி மக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் முறையிட்டுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட தலைமை அதிகாரிகளே ஏழை மக்களுக்கு எதிராக செயல்படும் காணி மோசடி மாபியாக்களை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டியது உயர் அதிகாரிகளின் கடமையாகும் என அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபயவின் கவனத்திற்கு உடன் கொண்டு வர வேண்டும் என மேலதிக கோரிக்கை விடுத்துள்ளனர்.