Oktober 7, 2024

இந்த நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு மாதுளை சாப்பிடலாமா?

இந்த நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு மாதுளை சாப்பிடலாமா?

பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும்.

அதிலும் மாதுளையில் எண்ணில் அடங்காத நன்மைகள் உள்ளது.

மாதுளையை தினமும் சாப்பிட்டால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும். அவற்றினை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

  • மாதுளையில் உடலுக்குத் தவையாக என்சைம்கள் மிக அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.
  • மாதுளை ஜூஸானது எலும்புத் தேய்மானத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
  • எலும்பு முறிவு, மூட்டுவலி போன்றவை வராமல் தடுக்க வேண்டுமானால் தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்து வாருங்கள்.
  • மாதுளையில் குளுக்கோஸின் அளவு மிகமிகக் குறைவு. அதில் அதிக அளவு பிரக்டோஸ் இருக்கிறது.
  • அதனால் மாதுளை ஜூஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
  • தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை என்னும் நீரிழிவு நோய் வராமல் இருக்கும்.
  • சிலருக்கு நேரத்துக்குப் பசி எடுக்காமல் இருப்பதுதான் பெரும்பான்மையான பிரச்சினைக்குக் காரணமாக அமைகின்றது.
  • இந்த பசியின்மை பொதுவாக குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் மிக அதிக அளவில் உண்டாகும்.
  • அவர்களுக்கு தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் கொடுத்து வந்தால், நேரத்துக்குப் பசி எடுக்கும். மாதுளைக்குப் பசியைத் தூண்டும் ஆற்றல் உண்டு.
  • மாதுளையை ஏன் மக்கள் தேடிப் போகிறார்கள் என்றால், அதில் உள்ள இயற்கையான, அதிகப்படியான ஆற்றலை வழங்குகிறது என்பதால் தான்.
  • அத்தகைய மாதுளை நம்முடைய உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், உடலைச் சுத்தம் செய்வதிலும் முன்னுக்கு நிற்கிறது.
  • அதனால் தேவையில்லாத நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வெளியேறி, உடல் எடையைக் குறைக்கிறது.