கமல் படத்தில் 3 நாயகிகள்!

கமல் படத்தில் 3 நாயகிகள்!

இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர். ஒருவர் ஏற்கனவே தேவர் மகன் படத்தில் நடித்த ரேவதி தொடருகிறார். இவர் தவிர ஆண்ட்ரியா, பூஜா குமாரும் ஆகியோரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.