22 பேரைக் கொன்றது அம்பான் சூறாவளி! தூக்கம் கலைந்த மில்லியன் கணக்கான மக்கள்!

பங்களாதேசம் மற்றம் இந்தியாவின் கிழக்கு பகுதியில் வீசிய சூறாவளி 22 பேர் கொன்றுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது.

கொரோனா நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மணிக்கு 170 கிலோ மீற்றரில் வேகத்தில் சூறாவளி வீசியதால் மரங்கள், மின்சார கம்பங்கள் முறிந்து வீழ்ந்தன. வீடுகளின் சுவர்கள் மற்றும் கூரைகள் இடிந்து விழுந்தன. மின்மாற்றி நிலையங்கள் வெடித்துச் சிதறின.

காற்று வீசுவதைக் கண்ட மில்லியன் கணக்கான மக்கள் தூக்கமில்லாத இரவைக் கழித்தனர். தற்போது அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை சேதவிபரத்தை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.