Oktober 7, 2024

ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த புலம்பெயர் இளம்பெண்!

ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த புலம்பெயர் இளம்பெண்!

ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் புலம்பெயர் இளம் தமிழ் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த ரேகன் பிரியா (25) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

யாழ்பாணம், பண்டத்தரிப்பிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பமொன்றின், ஜேர்மனியில் பிறந்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சில வருடங்களின் முன்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை அவர் திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் இரண்டு மாதங்களின் முன்னர் பிரியா சத்திரசிகிச்சை மூலம் குழந்தையொன்றை பிரசவித்திருந்தார்.

சத்திர சிகிச்சையில் ஏற்பட்ட கவனக்குறைவான ஒரு சம்பவம் காரணமாக, மீண்டும் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரியா கோமா நிலைக்கு சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.