அலறும் சிங்கள தேசம்! – தமிழீழம் சைபர் போர்ஸ் தாக்குதலின் எதிரொலி (காணொளி )

மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 4 என்கின்ற பெயரில் தமிழீழம் சைபர் போஸ் சிறிலங்காவின் அமைச்சரவை அலுவலக குடியரசு இணையம் , துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட இணையங்கள் என்பன தாக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் சிறிலங்கா எங்கும் இந்த செய்தி பலத்த அதிர்வினை ஏற்படுத்தியுள்ளதுடன் சிறிலங்காவில் விமானப்படையின் சைபர் குழு அவசர அவசரமாக கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை முழுவதும் கணனிகளையும் தகவல் தொடர்பாடல் சாதனங்களையும் பாதுகாப்பாக பேணுமாறு சிறிலங்கா விமானப்படையின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி கடந்த 4 வருடங்களாக தமிழீழம் சைபர் போஸ் இந்த வகையான தாக்குதலை தொடுத்துள்ளது மட்டுமின்றி. கடந்த வருடம் சிறிலங்கா இராணுவத்தினரின் புதிய படைப்பிரிவாக ஒரு சைபர் படையணியும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி இவ்வாறனா தாக்குதல்களை தாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளவோம் என்ற சிறிலங்கா இராணுவத்தினரின் மூக்கை உடைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.