September 11, 2024

மீளப் பெறப்பட்டது முன்னணியினருக்கு எதிரான நீதிமன்றக் கட்டளை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 11 பேருக்கு  நீதிமன்றினால்  வழங்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவை நீதிமன்றம் இன்று மீள் பெற்றுக்கொண்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் வாதத்தையும், அவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவு வாரத்தில் அவர்கள் கடைப்பிடித்த சமூக இடைவெளி போன்ற விடயங்கள் ஆதாரபூர்வமாக காண்பிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் தனது கட்டளையை மீளப் பெற்றுள்ளது.

நீதிமன்றில் அனைத்து சட்டவாளர்களும் சமூகமளித்து இந்நடவடிக்கு எதிராக வாதாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.