தடை தாண்டி அஞ்சலி!

இன அழிப்பு அரசின் தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தடைகள்
தாண்டி வடக்கு கிழக்கு தமிழர் தாயத்தில் மக்கள் முன்னெடுத்திருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் உள்ளிட்டவாகளை தனிமைப்படுத்த பிறப்பித்த உத்தரவை யாழ்.நீதிமன்று விலக்கிக்கொண்டதனையடுத்து அவர்கள் இலங்கை படைகளால் நூற்றுக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்ட அல்லைப்பிட்டியில் மாலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் செல்கையில் திருப்பி அனுப்பபப்ட்ட  எம். கே. சிவாஜிலிங்கமும் அவரது குழுவும் யாழ்ப்பாணம் திரும்பி  செம்மணி பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் வல்வெட்டித்துறை ஊரனி இந்து மயானத்துக்கு அண்மையில் 40 கும் அதிகமான பொதுமக்கள் 1985ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று மாலை 18 மணி  18 நிமிடங்கள் 18 செக்கனுக்கு நினைவேந்தல் நிகழ்வைச் செய்தனர்.
முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது அலுவலகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் காலை வளாகத்திலுள்ள நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
பரவலாக இரவு 7 மணிக்கு சுடரேற்றி வடக்கு தமிழர் தாயகமெங்கும் வீடுகள் தோறும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.