September 9, 2024

இன அழிப்பு படைகள் குறித்து பெருமைப்படுகின்றார் கோத்தபாய?

கொரோனா பாதித்தவர்கள் இலங்கை பாதுகாப்பு படைகளிற்கு நன்றி சொல்வதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலகமெங்கும் கொலைகார படைகள் என அழைக்கப்படுகையிலேயே அவர் தனது படைகள் தொடர்பில் பெருமைப்பட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடு திரும்புவர்கள் படைகளிற்கு நன்றி தெரிவிப்பது தொடர்பில் கோத்தபாய பெருமைப்பட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களை தவிர, அதிகமான நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களாக – பண்டாரநாயக்க மாவத்தை, கேசல்வத்தை, மீத்தோட்டமுல்லை, வெல்லம்பிட்டி மற்றும் கோட்டஹென ஆகியன அடையாளம் காணப்பட்டிருந்தன.
பாதுகாப்புப் படையினரும் சுகாதார அதிகாரிகளும் உடனடியாக அங்கிருந்து 1500 க்கும் மேற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்குக் கொண்டுசென்றிருந்தனர்.
தற்போது அந்த பிரதேசங்களில் ஆபத்தான நிலை குறைவடைந்து மக்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தைவிட்டு வெளியேறியவர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக படையினருக்கு நன்றி தெரிவித்ததாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.