பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகால மரணமான யாழ் இளைஞன்!

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த செல்லமணி தனுஷ்சன் (வயது-35) என்ற 9 மாத பெண் குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

மதிய உணவை உண்டு விட்டு, வேலைத் தளம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நிலையில், பாலத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.