இலங்கை கடற்படையை துரத்தும் கொரோனா?

இலங்கை கடற்படையினை கொரோனா தொடர்ந்தும் துரத்திக்கொண்டேயிருக்கின்றது.
இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளிகளில் பெரும்பாலானோர் இலங்கை கடற்படையினராகவே உள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (16) இனங்காணப்பட்ட 10 பேரில் 9 பேர் கடற்படையினரென, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேலும் ஒருவர் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவரென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக 935 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.