Oktober 8, 2024

லண்டனில் சாலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை! நடந்தது என்ன?

லண்டனில் சாலையில் சென்ற போது சுருண்டு விழுந்து உயிரிழந்த புலம்பெயர்ந்த நபர் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெற்கு லண்டனின் Croydon சாலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்ற Morugan Swami (54) என்பவர் திடீரென கீழே சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்த நிலையில் Swami ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

அவர் இறந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. கடந்த 1980களில் Swami பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தார். அதற்கு முன்னர் அவர் இந்தியாவின் டெல்லியில் கராத்தே பள்ளியை நடத்தி வந்தார்.

Swami-க்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். Swami-ன் நெருங்கிய நண்பர் கூறுகையில், அவரை அறிந்தவர்களுக்கு, Swami ஒரு வலிமையான தன்மை கொண்ட தனித்துவமான மனிதர். தன்னை அறியாத நபர்களுக்கும் தயக்கமின்றி உதவி செய்வார்.

ஒரு சிறந்த கராத்தே பயிற்றுவிப்பாளராகவும், தற்காப்புக் கலைஞராகவும் அவர் இருந்தார்.

குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் கராத்தே மாணவர்களால் அவர் என்றும் நினைவில் வைக்கப்படுவார் என கூறியுள்ளார்.

இதனிடையில் Swami குடும்பத்தாருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஓன்லைன் மூலம் நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதில் £200 நிதி செலுத்திய அஷோக், ரூபி என்பவர்கள் கூறுகையில், எங்கள் நண்பர் மற்றும் ஆசிரியராக நீங்கள் இருந்தீர்கள். எப்போதும் எங்கள் இதயத்தில் இருப்பீர்கள், உங்களை மறக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.