September 10, 2024

யேர்மனியில் ஒரே தொழிற்சாலையில் 500 பேர் வேலை இழப்பு தொழிலாளர்கள் அதிர்ச்சியில்!

யேர்மனியில் லுடன்சைட் நகரின் அகில் உள்ள அல்லரனா என்ற இடத்தில் உள்ள ஒரு பிரபலமான பழமைவாய்ந்த மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் உருக்கு வார்ப்பு செய்யும் ஒரு தொழிற்சாலையில் 500 பேர் திடீர் என  யூலைமாதம் முதல்  வேலை இழந்ததாக தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது . இதனால்  தொழிலாளர்கள் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கதியாக உள்ளனர். யேர்மனியின் பல பாகங்களில் இந்த தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில் அல்லரனா நகர தொழிற்சாலை பல காலமாக மந்த கதியில் இயங்கிவந்த நிலையில் நிர்வாகம் 500 தொழிலாளர்களையும் எதுவித உதவிக் கொடுப்பனவுகளும் இல்லாமல் வெளியேற்றி முற்றாக மூடப்படவுள்ளது. இங்கு பல ஈழத்தவர்கள் 30 வருடங்களாக வேலைசெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் முத்திரைச்சந்தியில் வாள்வெட்டு; இருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டுக்குழுவினரால், மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்ததுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் இந்த சம்பவம் வாள்வெட்டுக் குழு வினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.

நேற்று மதியம் 2.00 மணியளவில் 10 மோட்டார் சைக்கிளில் புங்கன்குளம் வீதி வழியாக வாள்வெட்டுக் குழுவினர் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்றவர்கள், முத்திரைச் சந்திக்கு சென்று அவ்விடத்தில் நின்ற 2ஆட்டோவை சேதப்படுத்தியதுடன், இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்காகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.