Oktober 7, 2024

சுவிஸில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு நடுவே இரு பெண்களின் சட்டவிரோத செயல்,

சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு நடுவே சட்டவிரோத சூதாட்டம் நடைபெற்ற பகுதியை பொலிசார் அதிரடி சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பெர்ன் மண்டலத்தின் லிஸ் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பொலிசார் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனையின் முடிவில்,

பெண்கள் இருவரை கைது செய்துள்ளதுடன், பல ஆயிரக்கணக்கான பிராங்குகள் தொகையையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை நேரம் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி சோதனையில் மொத்தம் 40 பேரை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கைதான இரண்டு பெண்களும் உரிய அனுமதியின்றி வேலைக்குச் சென்றனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக புகார் செய்யப்பட உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த உணவகத்தில், சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது விசாரணைக்கு உட்படுத்தப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத சூதாட்டம் மற்றும் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் விளையாட்டு பந்தயம் குறித்து லிஸில் பல சந்தர்ப்பங்களில் சோதனைகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.