மன்மோகன் சிங்கிற்கு கொரோனா அறிகுறியா? வெளியான தகவல்

மன்மோகன் சிங்கிற்கு கொரோனா அறிகுறியா? வெளியான தகவல்

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் மன்மோகன் சிங்கின் உடல்நிலை முன்னேற வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், மன்மோகன் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் நலமுடன் இருப்பதாக டெல்லி எயம்ஸ் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

மேலும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இரண்டொரு நாளில் அவர் புரண நலம் பெற்று வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You may have missed