கனடாவில் 308 கி.மீ வேகதில் மகிழுந்தில் பயணித்த இளைஞர் கைது!

கனடாவில் மணிக்குச் சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் மெசடஸ் மகிழுந்தைச் ஓட்டிய 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் ஒன்ராறியோ மாநிலத்தின் குயின் எசிசபெத் வேய் என அழைக்கப்படும் விரைவுச் சாலையில் நடந்துள்ளது.

மகிழுந்தை செலுத்தி இளைஞரோடு 19 வயதுடைய மற்றொரு இளைஞரும் இருந்துள்ளார்.

விசாரணைகளின் போது குறித்த இளைஞன் பெற்றோரின மகிழுந்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து இளைஞரின் ஓட்டுநரின் வாகன உரிமம் தற்காலிகமாய் இரத்து செய்யப்பட்டது. மகிழுந்தும் 7 நாள்களுக்குப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாலைப் பந்தயத்தில் ஈடுபட்டதாகவும், ஆபத்தான முறையில் மகிழுந்தைச் செலுத்தியதாகவும் குறித்த இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.