September 16, 2024

புதுக்குடியிருப்பில் 11  பின்னர் வெளிப்பட்டது விடுதலைஆண்டுகளின்ப்புலிகளின் பெட்டகம்!

இறுதிப் போர் நிறைவு பெற்று 11 ஆண்டுகளின் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் உடமைகள் அடங்கிய பெட்டகம் ஒன்று வெளிப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் உள்ள காணி ஒன்றை நேற்று துப்பரவு செய்து நிலத்தில் குழி எடுத்தபோது பச்சை நிற பெட்டகம் ஒன்று காணப்பட்டுள்ளது.

இதையடுத்து காணிக்கு சொந்தக்காரர் உடனடியாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு காவல்துறையினர் குறித்த பெட்டியை எடுத்து திறந்து பார்த்தனர்.

அப்பெட்டகத்தில் இருந்து, விடுதலைப் புலிகளின் சீருடை உள்ளிட்ட ஆவணங்கள் காணப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் நான்கு சீருடைகள், நான்கு தொப்பிகள், பெண் போராளிகள் பயன்படுத்தும் இடுப்பு பட்டி, சாதாரண(சிவில்) உடைகள், ஒளிப்பட தொகுப்பு, ஒலிப்பதிவு சுருள், நான்கு புகைப்பட கோவைகள் (அல்பம்) உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் ஆவணங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளது.

இவை, இறுதிப் போர் காலத்தில் பெண் போராளிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் மீட்டுக் கொண்டு செல்லப்பட்டிருக்கு இவை அணைத்தும் இன்று (மே-12) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.