துயர் பகிர்தல் திரு விக்கினேஸ்வரன் அப்புத்துரை

திரு விக்கினேஸ்வரன் அப்புத்துரை

தோற்றம்: 03 ஜூலை 1950 – மறைவு: 09 மே 2020

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Kalundborg ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் அப்புத்துரை அவர்கள் 09-05-2020 சனிக்கிழமை அன்று டென்மார்க்கில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, தவபாக்கியம் தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும்,

காலஞ்சென்ற தருமலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,

வினோதா(டென்மார்க்), வினோத்(டென்மார்க்), காலஞ்சென்ற விஜித் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

துஷ்யந்தன்(டென்மார்க்), அர்ச்சனா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதேஷ், துவாணிக்கா, அஸ்வினி, வைஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராஜேஸ்வரி விஜயரட்ணம்(கனடா), ஞானேஸ்வரி வசந்தகுமார்(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், வசந்தகுமார் மற்றும் நிர்மலாதேவி- மாணிக்கவாசகர்(லண்டன்), பேபிமலர்- பற்குணராஜா(பிரான்ஸ்), பாலகிருஷ்ணன்- மனோன்மணி(கனடா), கண்ணபிரான்- கோமளகெளரி (லண்டன்), வசந்தி- ராஜநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: -குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
வினோத் – மகன் Mobile : +45 51 36 2363   
துஷ்யந்தன் – மருமகன் Mobile : +45 60 18 8280