September 11, 2024

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் மாவையை தலைவராக ஏற்கவில்லை – சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு நேற்று
முன்தினம் வழங்கிய நேர்காணல் தொடர்பான விடயங்களை கண்டிக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்தின்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-

சுமந்திரன் அவர்கள் தமிழரசுக் கட்சிக்குள் வந்து சேரும் போது அதன் கொள்கைகளை நிட்சயமாக ஏற்றுக் கொண்டுதான் சேர்ந்திருக்க முயும்

ஆனால் சுமந்திரன் எனக்கு ஒரே ஒரு தலைவன் தான் இருக்கிறார் அது சம்பந்தன் மட்டுமே எனக் கூறியுள்ளார். எனவே தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இருக்கும் சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவை தலைராக ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதை கட்சிதான் மக்களுக்குத் தெளிபடுத்த வேண்டும்.

ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், பின்னர் தமிழரசுக் கட்சியும் ஆயுத போராட்ட  இயக்கங்களை ஏற்றக்கொண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்டப்பு என்ற ஒரு கூட்டு உருவானது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள், ரெலே, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயங்களின் கொள்கைகளை நடைமுறைகளை ஏற்றக்கொண்டுதான் கூட்டு உருவானது.

பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்பு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடைத்துவதற்கு சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர் கிளிநொச்சி சென்று திரும்பியிருந்தவர்கள்.

அவர் கூறிய கருத்துக்களை கீழ்வரும் காணொளியில் பார்வையிடலாம்.