September 11, 2024

விடுதலைப்புலிகளின் சின்னத்தை பயன்படுத்தி கொரோனாவுக்கு நிதி வசூலித்த அமைப்பு- லண்டனில் சம்பவம்

பிரித்தானியா லண்டன் நகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய கொடியை பயன்படுத்தி கொரோனா தொற்றாளர்களுக்கு என நிதி சேகரித்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ உதவிகளுக்காகவும் சுகாதார பிரிவினருக்கு உதவும் வகையிலும் அங்குள்ள அமைப்பொன்று பொதுமக்களிடம் நிதி வசூலித்துள்ளது.

இதன்போது குறித்த அமைப்பு விடுதலைப்புலிகளின் சின்னங்களையும் கொடிகளையும் பயன்படுத்தியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொடியின் பெறுமதியை தெரியாதவர்களே இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளை செய்ய முற்படுகின்றார்கள். மக்களின் உணர்வுகளோடு எம் தேச உணர்வுகளோடும் விளையாடும் ஒரு செயற்பாடாகத்தான் இருக்கிறது. குறித்த சம்பவத்தில் தேசியக்கொடியை பயன்படுத்தி நிதி சேகரிப்பதற்கு என்ன அவசியம் உள்ளது? என்கின்ற கேள்வி எழுகின்றது.