September 11, 2024

வடக்கில் விரக்தியில் முஸ்லீம்கள்:இன்று கொரோனா இல்லை?

வடக்கில் படைமுகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தென்னிலங்கையே சேர்ந்த முஸ்லீம் குடும்பங்கள் மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.போதிய குடும்ப தொடர்புகள் அற்றவர்களாகவும் உதவிகள் கிட்டாதவர்களாகவும் தாம் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே யாழில் தனிமைப்படுத்தப்பட்ட தென்னிலங்கையினை சேர்ந்த 298 பேர் இன்று விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.தென்மராட்சி விடத்தற்பளை 522 படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து  தனிமைப்படுத்தப்பட்டிருந்த 188 ஆண்களும், 110 பெண்களும்  இந்த தனிமைப்படுத்தப் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில்,  17 நாட்களில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில்  இன்று காலையில் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே யாழ்.போதனாவைத்திய சாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வகங்களில்  இன்றைய பரிசோதனைகளில்; ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று 94 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆயவுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும்  இலங்கை விமானப்படை இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த 33 பேரும் ஆய்வுக்குள்ளாகியுள்ளனர்.