Mai 23, 2024

பிரபாகரனை நிராகரிக்கிறேன்- சிங்கள மக்களுடன் வாழ்வது அதிஸ்டம் – சுமந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயெ மேற்கண்டவாறு தெரிவித்த, சுமந்திரன் தான் ஐந்து வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களுடனேயே வாழ்வதாகவும் அவர்களுடன் வாழ்வதை அதிஸ்டமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காத் தேசியக் கொடியை ஏற்றுக்கொள்கிறீர்களா என செவ்வியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன், கூட்டமைப்பில் தேசியக் கொடியை ஏற்றுக்கொண்ட இருவர் தானும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் மட்டும்தான் என்றார்.