பளைப் பகுதியில் நிவாரணம் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல்! வெளியான வீடியோ!

பளைப் பகுதியில் நிவாரணம் கொடுத்துக் கொண்டிந்த தாக்குதல் முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று மாலை பளைப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருந்த போது அங்கே மதுபோதையில் வந்த சிலர் இங்கே நிவாரணம் கொடுக்கக்கூடாது எனவும் உடனடியாக இடத்தை விட்டு வெளியேறுமாறும் இல்லையேல் பொலிஸை வைத்து தூக்குவோம் என கூறி மிரட்டினார்கள்.

அத்துடன் எமது சக உறுப்பினர்களையும், பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனங்களையும் தாக்க முயற்சித்தார்கள்

இதனையடுத்து அப்பிரதேச மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று உலர் உணவுப் பொருட்கள் வழங்கமுடியவில்லை.