September 11, 2024

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியும்

இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் தமிழ் மக்கள் அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். அந்த அடக்குமுறையை எதிர்கொள்ள 1976ஆம் ஆண்டு தமிழ் மக்களை பாதுகாக்கும் இராணுவ அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார்கள்.1983இல் உள்நாட்டுப் போர் தொடங்கியது. விடுதலைப் புலிகள் அமைப்பு வலுவான போரிடும் படையாக மாறியது.

இந்தநிலையில், 2006ஆம் ஆண்டு கனடிய அரசு, இலங்கை அரசின் பொய்ப் பரப்புரைகள் மூலமாக ஈர்க்கப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் இணைத்தது. இதன் விளைவு தமிழ் மக்கள் இரண்டாம் தர மக்களாக உலகின் பார்வையில் பார்க்க வைத்தது. விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்குத் தமிழர்கள் காரணம் அல்ல. அதனை இன்று வரையிலும் பன்னாடுகள் புரிந்துகொள்ளவில்லை. இலங்கை அரசே அதற்கு காரணம் என்பதையும் யாரும் புரிந்துகொள்ளாது, விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறுவது வேதனையாக உள்ளது.

உள்நாட்டுப் போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. புலிகள் ஆயுதப் போரைக் கைவிட்டனர். புலிகள் மீண்டும் ஒரு போராடும் படையாக அணி திரளப் போவதில்லை. எனவே, விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இனி வைத்திருக்கத் தேவையில்லை. எதற்காக விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டும்? விடுதலைப் புலிகள் வேறு இனமோ அல்லது வேறு சமூகமோ கிடையாது. மாறாக அவர்கள் தமிழ் மக்களின் உடன் பிறப்புக்கள்.

இந்தநிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் பயங்கரவாத பட்டியலில் வைத்திருப்பது கனடாவில் தமிழர்கள் தலைக்கு மேல் தொங்கும் கருப்பு மேகம் போன்றது. இந்த தடை தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவே அவமதிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் அவர்கள், தாயகத்தில் போரில் உயிர் நீத்த தங்களின் உறவினர்களையும், தியாகிகளையும் பகிரங்கமாக நினைவு கூருவது மற்றும் அவர்களின் நினைவு அஞ்சலி செலுத்துவதையும் அரசு தடுக்கின்றது. கனடா வாழ் தமிழர்கள் மீண்டும் மதிப்புடன் வாழவேண்டும் . ஆகவே, பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை கனடா அரசு நீக்க வேண்டும் என்று
ஒண்டாரியோ நாடாளுமன்ற உறுப்பினர் தனி நபர் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து, அதில் மேற்குறித்த கோரிக்கையை 2018 ஏப்ரல் மாதம் முன்வைத்தது குறிப்பிட்ட தக்கது

கனடாவில் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை 2006 ஆம் ஆண்டு அன்றிருந்த Conservative அரசால் வெளி அழுத்தம் காரணமாக போடப்பட்டதாக அறியமுடிகிறது. சிறிலங்காவின் தமிழின அழிப்பிற்கு எதிராக போரிட்ட தமிழீழ அரசு அந்நிய சக்திகளின் ஆதரவுடன் முழுமையாக May 2009 இல் அழிக்கப்பட்டபோது தமிழ் புலிகளும் மறைந்து போயினர். பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதன் பின்னர் சிறிலங்காவினால் கொல்லப்பட்டனர். போரில் கைப்பற்றப்பட்டவர்களை கொல்வது போர்குற்றமாக கருதப்பட்டு அமெரிக்க அரசும் அண்மையில் ஸ்ரீலங்கா இராணுவ தலைவர் மீது பயணத்தடை விதித்துள்ளது. ஒருவருடத்திற்கு முன்னர் தமிழர் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலையை ஐநாவில் கொண்டுவர வேண்டும் என்று கனடா பாராளுமன்றில் எல்லா கட்சிகளும் ஆதரித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

கனடாவில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் நிரல் வெளியிடப்படும். ஐந்து வருடத்தின் முன் Liberal ஆட்சிக்கு வந்தபின்பும் இந்த தடை புலிகள் இல்லாமல் இருந்தபோதும் புதுப்பிக்க பட்டுள்ளது. இரு வருடத்தின் முன் Ontario பாராளுமன்றில் இந்த தடை தமிழர் இனப்படுகொலை தெளிவாக தெரிந்த பின்னும் தொடர்வது தமிழர் மீதான ஒரு கரும்புள்ளியாக இருப்பதாகவும் அதை நீக்கவேண்டும் என்றும் பிரேரணை எடுக்கப்பட்டது.

எதிர்வருகின்ற பழமைவாத கட்சியின் தமைக்கான போட்டியில் பிரதான போட்டியாளர்கள் பல்வேறு முறைகளில் ஒன்லைன் மூலமான மக்கள் சந்திப்புகளையும் அங்கத்தவர் சேர்க்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கனடாவில் இயங்கி வருகின்ற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஸும் (zoom) மூலம் சந்தித்து கலந்துரையாடினார் அதன் போது Conservative தலைமைக்கான போட்டியில் புலிகள் மீதான தடை நீக்குதல் சம்பந்தமாக கேற்கப்பட்ட கேள்வியின் போது பத்து வருடத்திற்கு முந்திய தடை அந்த அமைப்பு இல்லாத போது தொடர்வது ஏன் என்று தெரியவில்லை ஆனால் அது பற்றி தம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என Conservative தலைமை போட்டியாளர் MP Erin O’Toole கனடிய Conservative தமிழர்களுடன் கருத்துரையாடலில் தெரிவித்திருந்தார். மற்றைய Conservative போட்டியாளரான Former MP Peter Mackay அவர்களிடமும் கேட்கப்பட வேண்டியள்ளது.. அத்துடன் Liberal MP களும் இந்த தடை பத்துவருடம் கடந்தும் ஏன் உள்ளது அதை நீக்குவது பற்றி கேள்வி உள்ளது. ஐநாவினால் தீர்மானிக்க பட்ட போர் குற்ற தீர்ப்பாயத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் புலிகள் மீதான தேவையற்ற அதே நேரம் பிழையாக போடப்பட்ட தடை வரலாற்றை மறைக்கும் ஒரு சதியாக தான் பார்க்க வேண்டி உள்ளது.