துயர் பகிர்தல் திரு நாகநாதர் விஜயநாதன்

திரு நாகநாதர் விஜயநாதன்

மறைவு: 06 மே 2020

யாழ்ப்பாணத்தில் பிறந்து ரொரண்டொ, கனடா, நியு ஜேசி ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த திரு. நாகநாதர் விஜயநாதன், புதன்கிழமை May 06, 2020 இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னார் காலஞ்சென்ற திரு, திருமதி நாகநாதர், புஷ்பகாந்தியம்மா அவர்களின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற திரு, திருமதி சின்னத்துரை நாகலிங்கம்,நான்மலர் அவர்களின் அன்பு மருமகனும்,
 
லலிதாவின் பாசமிகு கணவரும்,
 
ராம் விஜயநாதன், கிருஷ்ணா விஜயநாதன் ஆகியொரின் அன்புத் தந்தையும்,
 
றூபால் அமினின் அன்பு மாமனாரும்,
 
மீலா லஷ்மியின் பேரனும்,
 
காலஞ்சென்ற ஸ்ரீபுஷ்பநாதன் (காலஞ்சென்ற அங்கயற்கரசி), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் (பரமேஸ்வரி), காலஞ்சென்ற தர்மவதி இரத்தினசபாபதி, காலஞ்சென்ற புனிதவதி வேலும்மயிலும், காலஞ்சென்ற சத்தியதேவி சண்முகநாதன், பத்மாதேவி பொன்னம்பலம், சிவநாதன் (கலாமதி), கௌசலாதேவி (பிரேமச்சந்திரன்), சத்தியநாதன் (கலாவதி) ஆகியொரின் அன்புச் சகோதரரும்,
 
ரமேஷ், கணேஷ், குமரேஷ், கேஷான், பிரதீபன், சேந்தன், டாக்டர் இந்திரஜித், சுப்ரன், பிரகாஷ், புனிதா ஆகியொரின் மாமாவும்,
 
பின்வரும் நடராஜா குடும்பத்தினரின் உடன்பிறலாச் சகோதரரும்,
 
ராஜேஸ்வரி (கந்தசாமி), காலஞ்சென்ற சத்தியபாமா (சொர்ணலிங்கம்), காலஞ்சென்ற ருக்மணி (சுப்ரமணியம்), விஜயலஷ்மி (பாலேந்திரன்), சிவகுமாரன் (பாலினி), ராஜகுமாரன் (ஜெகஜனனி).
 
பின்வரும் பாலசுந்தரம் குடும்பத்தினரின் மைத்துனரும் ஆவார்.
 
ஞானசண்முகம், சுந்தரி, காலஞ்சென்ற யோகசுந்தரம், டாக்டர் பாலகிருஷ்ணன், யோகேஸ்வரி, காலஞ்சென்ற சிவானந்தசுந்தரம்
 
மேலும் காலஞ்சென்ற டாக்டர் துரைசாமி (விமலராணி), மாமா டாக்டர் தனுஷன், டாக்டர் அயீஷா, துஷ்யந்தன்.
 
இறுதி நிகள்வுகள் தற்போதைய கட்டுப்பாட்டு வதிமுறைகளுக்கு அமைய நடாத்தப்படும்.
 
பூக்கள் அன்பளிப்பிற்குப் பதிலாக எங்கள் அப்பாவைப்பற்றிய சந்தோஷமான ஞாபகங்களைத் தயவுசெய்து பரிமாறுங்கள்.
 
தகவல் :-பிள்ளைகள்.