September 9, 2024

கொரோனா: வார்ததைப் போர் உச்சம்; ஆய்வுக்கு தயாரென்கிறது சீனா!

COVID-19 கிருமி எங்கிருந்து தொடங்கியது என்பதற்கான உலக சுகாதார அமைப்பின் ஆய்வுத் திட்டத்துக்கு  உதவத் தயாரென
சீன தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ (Mike Pompeo), அடுக்கடுக்காய் பொய் சொல்லி பெய்ச்சிங்கைத் தாக்கி வருவதாகவும் சீனா கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு நல்க பெய்ச்சிங் எப்போதும் தயாராக இருப்பதாக, சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ஹுவா சுன்யிங் (Hua Chunying) கூறினார்.
கொரோனா கிருமி சீனாவில் தொடங்கியிருக்க வாய்ப்பு இல்லை என்று கூறிய அவர், பிரான்ஸ், சுவீடன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் சென்ற ஆண்டு இறுதியிலேயே சில கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதைச் சுட்டினார்.
தொடக்க நிலையில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான சம்பவங்கள் குறித்து ஆய்வு நடத்துமாறு உலக நாடுகளை, நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.