Oktober 7, 2024

யாழில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற திருட்டு!

யாழில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற திருட்டு!

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த திருட்டு சம்பவம் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி ஊரெழு பகுதியில் கடந்த முதலாம் திகதி இடபெற்றிருந்தது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளானர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருட்டில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திய சைக்கிள், வாள் திருட்டுப்போன கோடரி, சைக்கிள், திருடிய நகைகளை அடைவு வைத்ததற்கான அடைவு சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள் என்பவற்றினை போலீசார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 35 வயதுடைய மல்லாகம். உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதவானிடம் முற்படுத்தப்பட உள்ளதாகவும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.