September 9, 2024
தந்திரவாதிகளின்
மந்திர புன்னகையில்
சுதந்திரம் பறிபோனது…
வியாபார யுக்தியால்
விலை போனது
இராவண தேசம்.
சோரம் போன
சிங்களம் சிறுக
சிறுக தேசம் விற்றது..
பக்கத்து தேசம்
பெரும் ஆபத்தை
நோக்கியும் நோவின்றி..
நாவடக்கியது.
காத்தவரின்
பலமறியாது
கை கோர்த்து
நாசம் செய்தது.
பாதகம் புரிந்த
பாரதம் வேதம் மறந்தது.
சேதம் யாருக்கு
விடை தெரிந்தோர் பகிர்வீர்..