பிரித்தானிய முதியோர் இல்லங்களில் 6,686 பேர் உயிரிழப்பு!!

பிரித்தானியாவில் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா தொற்று நோயினால் இதுவரை 6,686 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு தழுவிய ரீதியில் 15,000 மேற்பட்ட முதியோர் பராமரிப்பு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 200 இல்லங்கள் மருத்துவ வசதியுடன் கூடியவை. இங்கு 4.11 லட்சத்துக்கும் அதிகமான முதியவர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் சுமார் 22 முதல் 25 சதவீதம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் இம்மாதம் 1 ஆம் திகதி  வரையிலான 21 நாட்களில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி 6,686 பேர் பலியாகியுள்ளனர். இதனால், பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.