September 11, 2024

5 ஆயிரம் போதாது 20 ஆயிரம் வழங்குங்கள் – சஜித்!

ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணத் தொகையாக, வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள எமது நாட்டு மக்களுக்கு, மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதானது, எந்தவொரு சூழ்நிலையிலும் போதாது என்பதை நான் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றும்,எனவே, குடும்பத்திற்கு தலா 20 ஆயிரம் ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, நாட்டின் ஒட்டு மொத்த மக்களே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளை அரசியல் மயமாக்காமல் இருக்க வேண்டும் எனவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாம் இவ்வேளையில் மனிதத் தன்மையுடன் வரி செலுத்தும் மக்களுக்காக செயற்பட வேண்டும் என கூறிய அவர், பீ.சி.ஆர். பரிசோதனைகளை இன்னும் அதிகரிப்பதுடன் ,வைத்தியர்கள், முப்படையினர், அதிகாரிகள் என அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சஜித் இதன்போது மேலும் தெரிவித்தார்.