விரைவில் மீளத் திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்..?

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீளவும் திறக்க விமான நிலைய மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை அவதானம் செலுத்தியுள்ளது.சுகாதார பரிந்துரைகளின் கீழ் கட்டுநாயக்க விமான நிலைய நடவடிக்கை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய பின்னர் சுகாதார பிரிவு வழங்கும் பரிந்துரை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கமைய இந்த நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.சுற்றுலா மற்றும் விமான சேவை துறைக்கான திட்டங்களை இணைந்து திட்டமிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.