வடமாகாணசபை திங்கள் முதல் வழமைக்காம்?

எதிர்வரும் 11ம் திகதி முதல் வடமாகாண அலுவலகங்கள் வழமை போல இயங்க பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு வாழ்க்கையையும் நிறுவனங்களின் செயற்பாடுகளையும் மே 11ஆம் திகதி, திங்கள், முதல் வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் ஆராயப்பட்டிருந்தது.
நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கையில்  ஊழியர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் போது அந்தந்த நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். நிறுவன கட்டமைப்புக்கு ஏற்ப பணி முறைமாற்றங்களைத் தீர்மானிக்க முடியும். சேவைக்குச் சமூகமளிக்கும் நேரத்தை ஒரு நிர்ணயமாக அன்றி, நிறுவனத் தேவையின் படி தீர்மானிக்க வேண்டுமென அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கோத்தபாயாவினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வடமாகாண அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இயங்கவுள்ளது.