மகன் கண்முன்னே மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

மகன் கண்முன்னே மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

மதுகுடிக்க பணம் தராததால் கர்ப்பிணி மனைவியை நான்கு வயது மகன் முன்னே துப்பாக்கியால் கணவன் சுட்டுகொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சர்பாதான் பகுதியில் உள்ள படோலி என்ற கிராமத்தில் வசித்துவரும் தீபக் என்ற நபர் மதுகுடிக்க பணம் வேண்டும் என மனைவியிடம் கேட்டுள்ளார். மனைவி பணம் தரமறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இறுதியில் கோபத்தின் உச்சிக்கு சென்ற தீபக் வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து தனது நான்கு வயது மகன் கண்முன்னே தனது கர்ப்பிணி மனைவியை சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த தீபக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.