September 11, 2024

காவல்துறைக்கு கொரோனா இல்லை!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக நேற்று (05) இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினரென, இராணுவத் தளபதி; சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொரோனா  தொற்றுடைய அதிகமானோர் இனங்காணப்பட்ட பேருவளை பகுதிகளில் கடமையில் ஈடுபட்ட 60 பொலிஸார,; பிசீ.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பரிசோதனை முடிவில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பேருவளை, சீனன்கொட்டுவ, பன்னில உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.
குறித்த பகுதிகளில் பலர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதையடுத்து, முடக்கப்பட்டிருந்த பகுதிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.