வவுனியாவில் குடும்ப பெண் மீது பெற்றோல் ஊற்றிய முஸ்லிம் இளைஞன்! வெளியான முக்கிய தகவல்!

வவுனியாவில் கர்ப்பிணி பெண்ணை தாக்கி குடும்ப பெண் மீது பெற்றோல் ஊற்றிய முஸ்லிம் இளைஞன் மீது வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்காளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பட்டக்காடு பகுதியை சேர்ந்த 5மாத கர்ப்பிணி பெண்ணை தாக்கியதுடன் அதை தட்டிக் கேட்ட அவரது உறவுக்கார பெண் மீது பெற்றோலை ஊற்றி தீ வைக்க முனைந்ததாக அதே பகுதியை சேர்ந்த 28வயதுடைய சிப்றாத் என்ற இளைஞன் மீது வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்காளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுடைய கணவரிற்கும் குறித்த இளைஞனுக்கும் இடையில் ஏற்கனவே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்த நிலையில் குறித்த கணவர் பிற இடத்தில் தங்கு வேலை செய்து வருகின்றார்.

அதனை தனக்கு சாதகமாக பாவித்த குறித்த இளைஞன் கணவர் இல்லாத நேரம் பார்த்து தனிமையில் இருந்த அந்த வீட்டிற்குள் களவாக வீடு புகுந்து அச்சுறுத்தல் விடுத்ததாகவும்,

அதனை தனது கணவருக்கு அறிவித்ததுடன் குறித்த கணவர் இளைஞரை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

தொடர்ந்தும் குறித்த பெண் தெரிவிக்கையில்,

இதில் மேலும் ஆத்திரமடைந்த இளைஞன் அவர்களது மகள் இன்று மாலை கடைக்கு சென்று வருகையில் இடைமறித்து எச்சரிக்கை விடுத்ததுடன் சற்று நேரத்தில்,

குறித்த வீட்டிற்கு சென்று கர்ப்பிணி பெண்ணான தன்மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அருகிலிருந்த தனது உறவுக்கார பெண்மணி மீதுபெற்றோலை உற்றி தீ மூட்ட முனைந்ததாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்ய முற்பட்டுள்ளதுடன் பொலிஸார் கர்ப்பிணி பெண்னை வைத்தியசாலையில் அனுமதிக்கவும் முற்பட்டுள்ளனர்.