Oktober 7, 2024

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் மும்முரம்!

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18ம் திகதியன்று வழமை போல நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு இன்று அறிவித்துள்ளது.
கொவிட் 19 பரவல் காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள் , சட்டங்கள் என்பவற்றிற்கு மதிப்பளித்து அவற்றைக் கடைப்பிடித்தபடி இந்நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
தமிழர் தாயக வளங்களை ஒன்று திரட்டிப் பயன்படுத்துவதன் மூலம் நினைவேந்தல் எளிமையாகவும் உரிய முறைப்படியும் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு நிதி திரட்டல் நடவடிக்கைகள் எதிலும்  ஈடுபடாது.
நினைவேந்தல் நடவடிக்ககைகள் தொடர்பில் அனைத்து பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இந் நினைவேந்தலுக்காய் தம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதுடன் நினைவேந்தல் தொடர்பான நிகழ்சி ஒழுங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் எனவும்      முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்கள் தொடர்புகளுக்கு தென்கையிலை ஆதினம் ,திருகோணமலை                            தொலைபேசி இல:775098157 மற்றும் வணபிதா                                             அருட்பணி லியோ ஆம்ஸ்ரோங் ‭ தொலைபேசி இல:077 618 1008 தொடர்பு கொள்ள ஏற்பாட்டு குழு அறிவித்துமுள்ளது.