மயங்கி விழுந்த இராணுவ சிப்பாய்; உதவியின்றி மரணம்

மாத்தளை – தம்புள்ளை பொது கழிப்பறை ஒன்றின் முன்னால் மயங்கிவிழுந்து இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (4) உயிரிழந்துள்ளார்.

கலேவெல, பல்லேபொல பகுதியைச் சேர்ந்த துஷார குமார ஜயசிங்க எனப்படும் இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மயக்க நிலையில் இருந்த குறித்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனா அச்சம் காரணமாக அரை மணி நேரமாக யாரும் உதவி செய்ய செல்லவில்லை என்றும், அதன்பின்னரே இருவர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.