September 11, 2024

சிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கு அனுமதி !

கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான சிகையலங்கார நிலையங்களை இலங்கை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் மூடுவதற்கு உத்தவிட்டது.
இந் நிலையில் சிகையலங்கார நிலையம் மற்றும் , ஒப்பனை நிலையங்களை திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அழகுக்கலை நிபுணர்களுக்கும் சுகாதார அமைச்சிற்கும் இடையில் நடை பெற்ற விசேட கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்திங்கட் கிழைமை அழகுக்கலை நிபுணர்கள் சிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கு சுகாதார அமைச்சிடம் வேண்டு கோள் விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக அனைத்து சிகையலங்கார நிலையங்கள் மற்றும் ஒப்பனை நிலையங்களும் இயங்கவேண்டும் என்றும் கண்டிப்பாக சமூக இடைவெளி பேணப்பட்டு முடிவெட்டுதல் மாத்திரம் மேற் கொள்ளப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறித்தல் விடுத்துள்ளது.