இங்கிலாந்தில் சிக்கியிருந்த 194 மாணவர்கள் இலங்கை வந்தடைந்தனர்..!!

இங்கிலாந்தில் சிக்கியிருந்த 194 மாணவர்கள் இலங்கை வந்தடைந்தனர்..!!

இங்கிலாந்தில் சிக்கியிருந்த 194 இலங்கை மாணவர்களை ஏற்றிய, இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் இன்று (6)காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யுஎல் -504 இலக்க விமானம் அதிகாலை 3.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் குழு ஒன்றும் இந்த விமானத்தில் பயணிக்க, லண்டன் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும், முதலில் விமானம் கிருமி நீக்கம் செய்யப்பட்டது. பின்னர் பயணிகளும், பொதிகளும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, ஹொட்டல்களில் தனிமைப்படுத்த இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.