குடித்துவிட்டு தகர்த்தவர்கள் கைது

யாழ்ப்பாணம் – நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான மயானத்தில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சேதமாக்கல் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றிருந்தது.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விசாரணைகளின் போது கும்பல் ஒன்று மயானத்தில் வைத்து கள்ளு குடித்துவிட்டு கல்வெட்டுகளை சேதப்படுத்தியதாக தெரியவந்தது.