September 11, 2024

தாய் தந்தையை இழந்த முல்லை இளைஞன் சடலமாக மீட்பு?

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (3) காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கரும்புள்ளியான் பகுதியில் வசித்து வந்த பிரபாகரன் றொசாந்தன் (23-வயது) என்ற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்கு வருகை தந்த நிலையில் அவரை காணவில்லை என்று அவரது உறவினர்கள் தேடிய போது அவர் இன்று காலை வீட்டு கிணற்றில் சடலமாக  காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் சிறு வயதிலேயே தன்னுடைய தந்தை, தாயாரை இழந்த நிலையில் தன்னுடைய  அம்மம்மா, அம்மப்பா ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்போது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.