September 10, 2024

கூட்டமைப்பு மகிந்தவிடம் போகின்றது?

மகிந்த ராஐபக்ச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைத்துள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் திங்கட்கிழமை அலரி மாளிகைக்கு வருமான பிரதமர் மகிந்த ராஐபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்திற்கு சில கட்சிகள் செல்வதாகவும் சில கட்சிகள் செல்வதில்லை என்றும் முடிவெடுத்துள்ளன.
இந்நிலையில் கூட்டமைப்பு இக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவ்வாறு கலந்து கொள்வதற்கான காரணம் குறித்து கட்சியின் தலைவர் இரா சம்மந்தமன் அறிக்கையொன்றையும் வெளியிடுவாரென்றும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.